சனியால் ஏற்படும் பாதிப்பை போக்கும் கருப்பு மஞ்சள் – எதிர்மறை சக்திகள் ஓடிப்போகும்

கருப்பு மஞ்சள்:karu manjal

கணவன் மனைவி சதா சண்டையா? எப்ப பார்த்தாலும் உடம்பு சரியில்லாம போகுதா? பணம் வீட்டிலேயே தங்க மாட்டேங்குதா? கவலைப்படாதீங்க உங்க கஷ்டங்களை போக்கக் கூடியது கருப்பு மஞ்சள். அதென்ன கருப்பு மஞ்சள்னு பார்க்கறீங்களா? இது அற்புதமான தாந்த்ரீக மஞ்சள். மருத்துவகுணம் கொண்ட மகத்துவமான மஞ்சள்.

காளியின் அம்சம் கொண்டது இந்த கருப்பு மஞ்சள். நர்மதா நதிக்கரையிலும் மற்றும் மத்திய பிரதேசத்திலும் வளரக்கூடிய அற்புதமான மருத்துவ குணம் கொண்டது. வம்பு வழக்கு, சண்டை சச்சரவுகள் பிரச்சினைகள் அதிகமாக இருந்தாலும் கருப்பு மஞ்சளை உபயோகிக்க ஆரம்பித்தால் சண்டை சச்சரவுகள் தீரும்.

கருப்பு மஞ்சளை பைகளில் வைத்திருந்தால் வெற்றியை தேடித்தரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வராத பணமும் கைக்கு வரும். ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருப்பு மஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும். ஜன வசியம், பணவசியத்திற்கு ஏற்றது கருப்பு மஞ்சள்.

எதிர்மறை சக்திகள் ஓடும்:

கருப்பு மஞ்சள் காளி, பைரவர் உபாசனைக்கு பயன்படுத்தப்படுகிறது. செய்வினை கோளாறுகளை நீக்கும். எதிர்மறை சக்திகளை ஓட வைக்கும். வெற்றியைத் தேடித்தரும். ஜன வசியம், பணவசியம் செய்யக்கூடியது. சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த மஞ்சளை பணவசியத்திற்காக உபயோகிக்கின்றனர். நடு விரல் சனியின் அம்சம். அந்த விரலில் இருந்து ஒரு ஊசியால் குத்தி ரத்தத்தை எடுத்து அந்த ரத்தத்தில் இந்த மஞ்சளை அரைத்து நெற்றியில் பொட்டாக வைத்துச் சென்றால் வராத பணமும் கைக்கு வரும் என்பது நம்பிக்கை.

தோஷம் போக்கும்:

கருப்பு மஞ்சள் ஏழரை சனி, அஷ்டமத்து சனியால் ஏற்படும் பாதிப்புகள், ராகுவினால் ஏற்படும் தோஷத்தையும் போக்கக் கூடியது. பணம் வாங்க வேண்டும், லோன் சம்பந்தமாக பேச வேண்டும் என்று வெளியில் போனாலும் இதை பாக்கெட்டில் எடுத்து போனால் பணம் கிடைக்கும். வீட்டில் மட்டுமல்லாது தொழில் செய்யும் இடங்கள், ஹேண்ட்பேக், பணப்பெட்டி பீரோவில் வைக்கலாம்.

வெற்றி தேடி வரும்:

ஜாதகத்தில் ராகு திசை, குரு திசை நடப்பவர்களுக்கும் கோச்சார ரீதியாக சனி, ராகு, குரு பலவீனமாக இருந்தால் தினசரி கருப்பு மஞ்சளை வைத்து வர பாதிப்புகள் குறையும். நன்மைகள் பெருகும். இமயமலை மற்றும் இந்தோனேசியாவில் இது அதிகம் விளையக்கூடியது. பல நோய்களை குணப்படுத்தக்கூடியது. கருமஞ்சள் சிறிதளவு எடுத்து சிவப்பு துணியில் கட்டி கழுத்தில் தாயத்து போல அணிய எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும்.

செய்வினை கோளாறுகள் போகும்:

கருப்பு மஞ்சளை ஒன்பது துண்டுகளாக சிறிது சிறிதாக வெட்டி அதை பிரேஸ்லெட் போல கோர்த்து கைகளில் அணிந்து கொள்ளலாம் எதிர்மறை சக்திகள் ஓடிப்போகும். பேய் பிசாசுகள் பாதிப்புகள் இருந்தாலும் அந்த பாதிப்புகள் மறைந்து போகும் பணவரவு அதிகரிக்கும் உடல் நல பாதிப்புகள் சரியாகும்.

வேலை கிடைக்கும்:

புது வேலைக்கு இன்டர்வியூக்கு செல்பவர்கள் கருப்பு மஞ்சளை நெற்றியில் திலகமாக வைத்துக் கொண்டு சென்றால் அது வெற்றிகரமாக முடியும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கண் திருஷ்டி கோளாறுகள் இருந்தாலும் குணமடையும். தொழிலில் தொடர் நஷ்டம் ஏற்பட்டாலோ, உடல் நல பாதிப்புகள் வந்தாலோ இந்த கருப்பு மஞ்சள் நஷ்டத்தை போக்கும்.

BUY KARUPPU MANJAL CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *