Kabasura Kudineer
சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்களிடம் வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்திய சித்தமருத்துவர்கள் கபசுர குடிநீரை பரிந்துரை செய்தார்கள்.அதே நேரத்தில் இவை கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று நினைத்திட வேண்டாம். இவை கொரோனாவாக இருக்கலாம் என்று தனிமைப்படுத்தியவர்களுக்கும், அறிகுறிகள் இலேசாக இருக்கும் போது சிகிச்சை அளிப்பவர்களுக்கும் கபசுரகுடிநீரை கொடுக்கலாம். மேலும் அலோபதி சிகிச்சை பெறுபவர்களுக்கும் இந்த குடிநீரை கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்திருக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
யூகி முனி சித்தர் பொதுவாக காய்ச்சலை 64 வகை காய்ச்சலாக பிரித்திருக்கிறார். அதில் கபசுரகுடிநீர் வைரஸ் காய்ச்சலுக்கு மருந்தாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும் காய்ச்சல் வந்தபிறகு குணப்படுத்துவதற்கும் இதை பயன்படுத்தலாம் என்றும் வழிகாட்டியிருக்கிறார்.
சுக்கு, திப்பிலி இலவங்கம், சிறுகாஞ்சேரி வேர், அக்ரகாரம், முள்ளி வேர், ஆடாதோடை இலை, கற்பூரவள்ளி இலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறுதேக்கு, நிலவேம்பு சமூலம், வட்ட திருப்பி வேர், கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் என 15க்கும் மேற்பட்ட மூலிகை பொருள்கள் கலக்கிறார்கள். அதோடு இதை சுத்தம் செய்வதும் கடினம். அதனால் இதை சித்தமருந்து கடைகளில்கிடைக்கும் கபசுர பொடியாக வாங்கி பயன்படுத்தலாம்.
ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அரை டம்ளராக ஆகும் வரை சுண்ட வைத்து இறக்கி வடிகட்டி கால் தம்ளர் குடித்து வரவும். ஒவ்வொரு முறையும் அப்போது கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். மூக்கு, தொண்டை, சுவாசப்பாதையில் வரும் தொற்றுகளை நீக்கும் வல்லமை கொண்டது இந்த கபசுரக்குடிநீர். குறிப்பாக மூச்சுவிடுவதில் இருக்கும் சிரமத்தை குறைக்க உதவுகிறது.
சிறு பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது இந்த நீரை வடிகட்டி அதனுடன் இனிப்புக்கு சுத்தமான தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து கொடுக்கலாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும் போது மருத்துவரை கலந்தாலோசித்து கொடுப்பது நல்லது. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கபசுரகுடிநீரை தவிர்ப்பது தான் நல்லது.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review