Malam Ilakki Chooranam : மலமிளக்கி
மலச்சிக்கலின் பாதிப்பு, தடுக்கும் வழிமுறை: Malam Ilakki Chooranam : மலமிளக்கி
நோய்களில் மிகவும் தொல்லை தரும் நோய் மலச்சிக்கலாகும். பொதுவாகவே மலச்சிக்கல் உள்ளவர்கள் எப்போதும் தங்கள் மலப்போக்கினைப் பற்றியே சிந்தனைச் செய்வார்கள்.
எந்த நோய்க்கு இது அறிகுறி என்றால் பொத்தம் பொதுவாக எல்லா நோய்களுக்குமே மலச்சிக்கல் அறிகுறி என்று சொல்லி விடலாம். அதில் உச்ச கட்டமாக மலச்சிக்கல் அதிகமாக இருந்தால், நாள்பட்டதாக இருந்தால் அது மூல நோயில் முடிந்து நம்மை மூலையில் உட்கார வைக்கும் ஆபத்து இருக்கிறது. உள் மூலம், ஆசனவாய்க்கட்டி, ஆசனவாய் பிளவு, பௌத்திரம் போன்ற நோய்கள் கடுமையானவை. இவை அனைத்துமே மலச்சிக்கலில் இருந்துதான் தொடங்குகின்றன. எந்த வகையான மூலம் என்பதனை அறிந்து அதற்கான மருந்துகளை சாப்பிட வேண்டும். மலச்சிக்கல், ஆசனவாய் எரிச்சல், வலி, மலத்துடன் ரத்தம் போகுதல், தனியாக ரத்தம் சிவப்பு நிறத்தில் போகுதல், ஊறல், ஆசனவாய் நமச்சல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். ஆக மொத்தத்தில் காலையில் மலச்சிக்கல் இன்றி அன்றைய நாள் தொடங்க வேண்டும். மலச்சிக்கல் இன்றி அன்றைய நாளின் மாலை, இரவுப் பொழுது விடிய வேண்டும். அப்படி விடிந்தால் தான் அந்த நாள் இனிமையான நாளாக இருக்கும்.
மலச்சிக்கலின் இரு வகைகைள்:
மலம் நாள்தோறும் செல்லும். ஆனால் இறுகிப் போய் கட்டியாகிச் செல்லும். முக்க வேண்டிய அவசியம் இருக்கும்.
மலம் இறுகல் இன்றி சாதாரணமாக இருக்கும். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் செல்லும்.
மலச்சிக்கல் தொல்லைகள்:
- மலச்சிக்கலை கவனிக்காமல் விட்டால் பல தொல்லைகள் உண்டாகும். அத்தொல்லைகள் உடலுக்கு கெடுதல் விளைவிப்பதோடு உயிருக்கும் சில சமயங்களில் ஊறு விளைவிக்கும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் ஏற்படும் மலச்சிக்கலால் தொல்லைகள் இல்லை. ஆனால் பல மாதங்கள், பல ஆண்டுகள் தொடர்ந்து இருந்தால் அதனால் பல தொல்லைகள் ஏற்படலாம்.
- அவற்றில் சில:
- முதியவர்கள் மலச்சிக்கலினால் அவதியுறும்போது நெஞ்சு வலியும், மயக்கமும் வரக்கூடும்.
- குடல் இறக்கம் மற்றும் கால்களிலுள்ள ரத்தக் குழாய்கள் சுருண்டு பெரிதாகி, நோய் வர வாய்ப்பிருக்கிறது.
- மலம் சரிவரப் போகாததால் மனதில் ஒருவித துன்பம், ஒருவித பதட்டம் பற்றிக் கொள்ளும்.
- மலம் கட்டியாகப் போவதால் குதத்தில் விரிசல் ஏற்பட்டு அதனால் ரத்தக் கசிவு ஏற்படும்.
- மலச்சிக்கலினால் சில நேரங்களில் திடீரென்று சிறுநீர் அடைப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.
- மலம் சிறுகுடலில் தேங்கி நிற்பதால், சிறு குடலில் அடைப்பு ஏற்படலாம்.
- மலம் பெருங்குடலில் தேங்கி, சில சமயம் முழுமையாய் பெருங்குடலை அடைத்துவிடும். அப்படி முழுமையாய் பெருங்குடலை அடைத்து விடுவதால் அவ்விடத்தில் தேங்கியுள்ள அசுத்த நீர் மட்டும் கசிந்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும். அது வயிற்றுப் போக்குப் போல காணப்படும்.
மலமிளக்கி சூரணம் :
நாட்டுமருந்து.காம் தங்களுக்கு தரமான மலமிளக்கி சூரணத்தை தயார் செய்து வழங்கிறது.
மலச்சிக்கலே மனித உடலில் வரும் நோய்களுக்கு காரணமாகிறது. நமது மலமிளக்கி சூரணத்தில் உள்ள மூலிகைகள் சிறந்த மலம் அகற்றும் தன்மை வாய்ந்தவையாக உள்ளது. மேலும் பெருவயிறு ஏற்படாமலும் குடல்களில் மலம் தங்காமலும் மலத்தை முழுமையாக வெளியேற்ற உதவுகிறது.
- 100 சதவீதம் இயற்கையானது
- பக்க விளைவுகள் அற்றது
- 100 சதவீதம் மலச்சிக்கலுக்கு தீர்வாகும்.
- பெரு வயிறு ஏற்படாமல் தடுக்கும்.
- சிறந்த மலமிளக்கி.
உபயோகிக்கும் முறை :
ஒரு தேக்கரண்டி வெந்நீரில் கலந்து இரவு உணவுக்குப் பின் அருந்தவும்
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review