Nayuruvi Nature Tooth Brush
Botanical Name : Achyranthes Aspera
English Name : Prickly Chaff Flower
Tamil Name : நாயுருவி / Nayuruvi
Hindi Name : अपंग / चिरचरा / चिरेहित्ता / लटजीरा / ओंग || Apang / Chirchra / Chirehitta / latjira / Onga
Malayalam Name : അപമാർഗ പൊടി / Apamarga Powder
Telugu Name : ఆంటీష / అపామార్గము / ఉత్తరేణి || Antisha/ Apamargamu/ Uttareni
நாயுருவி பல் துலக்கும் குச்சி:
நாயுருவி மூலிகைக்கு ‘கல்லுருவி’ என்ற பெயரும் உண்டு. தரிசு நிலங்கள், வேலியோரங்கள், காடு, மலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் தானே வளரும் மூலிகை ஆகும். பற்பசைகளுக்கெல்லாம் முன்னோடி, நாயுருவிதான். முற்காலத்தில் மனிதர்கள், பற்பசை மற்றும் பல்துலக்கியாக நாயுருவி வேரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த வேரால் பல் துலக்கினால், பற்கள் கறைகள் நீங்கி வெண்மையாவதுடன், பாக்டீரியா போன்ற கிருமிகளும் ஒழிந்துவிடும்.
கடுமையான பல்வலி இருப்பவர்கள் மிருதுவான நாயுருவி வேருடன், சிறிது கடுகு எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால், வலி பறந்தோடி விடும்.
இதற்கு ‘மாமுனி’ என்ற ஒரு பெயரும் இருக்கிறது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்விகத் தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை ‘அட்டகர்ம மூலிகை’ எனக் கொண்டாடுகிறார்கள், சித்தர்கள்.
அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது,பொதுவாக துவர்ப்புச் சுவை உள்ள பொருள்கள், ஈறுகளைப் பலப்படுத்தி, ஈறுகளில் உள்ள புண் மற்றும் வீக்கத்தைக் குணமாக்கி பற்களை உறுதிப்படுத்தும். துவர்ப்புச் சுவைக்குக் காயங்களை ஆற்றும் தன்மையும் இறுகலடையச் செய்யும் குணமும் உண்டு. கசப்புச் சுவைக்கு கிருமிநாசினி செய்கை இருப்பது அனைவரும் அறிந்ததே.
Customer reviews
Reviews
There are no reviews yet.
Write a customer review