சப்ஜா விதை பயன்கள் | Sabja seeds uses in Tamil
0

சப்ஜா விதை பயன்கள் | Sabja seeds uses in Tamil

தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான விதைகள் சமையலுக்கும், மருத்துவ பயன் பாட்டிற்கும் உதவுகின்றன. நம் முன்னோர்கள் பல அரிய விதைகளை கொண்டு நோய்களுக்கு மருந்தாக பயன் படுத்தி உள்ளனர். முன்னோர்கள் வாழ்ந்த ஆண்டுகளில் குறிப்பாக கிராமங்களில் மருத்துவமனை இல்லாத இடங்களில் எல்லாம் மூலிகை செடிகளையும், விதைகளையும் கொண்டே தீராத வியாதியை குணப்படுத்தியுள்ளனர். இன்றும் கிராமப்புற மக்களின் வீடுகளில் நிறைய மூலிகை மரங்களையும், விதைகளையும் நாம் காணலாம். மருத்துவத்துறை அசுர வளர்ச்சி பெற்றிருந்தாலும் 95 சதவிகித மூலிகை மற்றும் விதைகளை கொண்டே மருந்துக்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் சப்ஜா விதைகள் என்னற்ற பயன்களைக் கொண்டுள்ளது. இந்த சப்ஜா விதைகள் மருத்துவ ரீதியாகவும், சமையல் ரீதியாகவும், அழகுக்கலை ரீதியாகவும் பயன் பாட்டிலுள்ளன.

1. மலச்சிக்கல் பிரச்சனைக்கு சப்ஜா விதை

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊற வைத்துவிட்டு பிறகு நன்கு ஊறிய சப்ஜா விதையை பாலில் கலந்து பருகினால் மலச்சிக்கல் நோய் தீர்ந்து விடும். பெண்மணிகளுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலை போக்க வல்லது சப்ஜா விதை.

2. உடல் எடை குறைய சப்ஜா விதை

சப்ஜா விதையில் புரதம், அத்தியாவசிய கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, மற்றும் குறைந்த அளவிலான கலோரிகள் உடல் எடையைக் குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

3. மாதவிடாய் பிரச்சனைக்கு சப்ஜா விதை Sabja uses Tamil:

சப்ஜா விதை பெண்களின் மாதவிடாய், வெள்ளைப்படுதல் நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊற வைத்த சப்ஜா விதையை ஒரு தேக்கரண்டி பாலிலோ அல்லது தேனிலே கலந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

4. தலைமுடி வளர்ச்சிக்கு சப்ஜா விதை 

சப்ஜா விதையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முடி உதிர்தலை கட்டுப்படுத்தி முடியின் வேர்களில் இருந்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் பொடுகு தொல்லையிருந்தும் விடுதலை அளிக்கிறது சப்ஜா விதைகள்.

5. சீரான ரத்த அழுத்திற்கு சப்ஜா விதை | Sabja seeds in Tamil

சப்ஜா விதையில் பொட்டாசியம் அதிகமாக காணப்படுகிறது. தினசரி ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை தண்ணிரில் ஊற வைத்து அதை பாலில் கலந்து பருகினால் ரத்த அழுத்தம் சீரான முறையில் இயங்கும்.

6. சர்க்கரை நோய்க்கு சப்ஜா விதைகள்

உலகத்தில் பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றனர். முதல் நாள் இரவில் சப்ஜா விதையை நீரில் ஊற வைத்துவிட்டு மறுநாள் காலையில் சர்க்கரை நோயாளிகள் ஊறவைத்த சப்ஜா விதையை பாலில் கலந்து பருகினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதை காணலாம்.

7. உடல் உஷ்ணத்திற்கு சப்ஜா விதை

கோடை காலத்தில் மக்கள் உடல் சூடு, அதிக உஷ்ணத்தால் ஏற்படும் கண் எரிச்சலில் இருந்து சப்ஜா விதைகள் பாதுகாக்கிறது.

8. சளி, இருமல் தடுக்கும் சப்ஜா விதை

மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து சப்ஜா விதைகள் பாதுகாக்கிறது. சுடுநீரில் ஒரு தேக்கரண்டி ஊற வைத்த சப்ஜா விதையை கலந்து பருகினால் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுதலை பெறலாம்.

9. கண் குறைபாட்டிற்கு சப்ஜா விதைகள்

சப்ஜா விதையில் பீட்டா கரோட்டின் அதிகமாக காணப்படுகிறது. சப்ஜா விதையை தினசரி பயன்படுத்தினால் கண் தொடர்பான பிரச்சினை நீங்கும்.

10. இதய நோயைக்கு சப்ஜா விதைகள் – Sabja seeds uses in Tamil

இதய நோயை சரிசெய்வதில் சப்ஜா விதை பெரும் பங்கு வகிக்கிறது. சப்ஜா விதையில் துத்தநாகம், சல்பர் போன்றவை அதிகளவு இருப்பதால் இதய தமனியை காக்க உதவுகிறது.

11. மன அழுத்த நீங்க சப்ஜா விதை

இன்றைய காலத்தில் மக்களை அதிகமாக தாக்குவது மன அழுத்த நோய். இந்த மன அழுத்த நோயை குணப்படுத்தும் ஆற்றல் சப்ஜா விதைக்கு உள்ளது.

12. எலும்பு வலுப்பட சப்ஜா விதை Sabja seeds benefits in Tamil:

சப்ஜா விதையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், காப்பர், இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகிறது. சப்ஜா விதையை தினசரி பயன்படுத்தினால் எலும்பு வலிமைக்கு உதவுகிறது.

13. ஆண்மை குறைபாடு நீங்க சப்ஜா விதைகள்

ஆண்மை‌ குறைவுள்ளவர்கள் சப்ஜா விதைகளை ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து தினசிரி‌ பருகினால் ஆண்மை குறைவு தீரும்.

14. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சப்ஜா விதை Sabja seeds benefits in Tamil language:

சப்ஜா விதையில் வைட்டமின் ஏ, பி, சி, சல்பர், காப்பர் போன்றவை அதிகளவு இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் வலிமைக்கும் சப்ஜா விதைகள் பயன்படுகிறது.

15. இரத்த சோகை பிரச்சனைக்கு சப்ஜா விதை

சப்ஜா விதையில் புரதம், நார்ச்சத்து, துத்தநாகம் அதிகம் இருப்பதால் இரத்த சோகை நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் சப்ஜா விதைகளில் காணப்படுகின்றன.

16. சப்ஜா விதையின் அழகுக் குறிப்புகள் – Sabja seeds benefits in Tamil

பெண்களின் அழகுக்கு சப்ஜா விதை முக்கிய பங்கு வகிக்கிறது. தினசரி ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை பாலில் கலந்து பெண்கள் பருகினால் ஊளைச்சதை, தேவையற்ற கொழுப்புகள் போன்றவை வெளியேறும். கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் நீங்க சப்ஜா விதையை மிக்ஸியில் சுத்தமான ரோஸ் வாட்டர் கலந்து அரைத்து பஞ்சில் நனைத்து பூசி வர கருவளையம் மறையத் தொடங்கும். மேலும் இந்த சப்ஜா விதை தினசரி உட்கொண்டால் முகத்தில் உள்ள வயதான தோற்றம் நீங்கி இளமைப் பொலிவு உண்டாகும்.

 

சப்ஜா விதை நன்மைகள்

Leave a Comment

Your email address will not be published.

0
X