நத்தைச்சூரி பயன்கள் :- நத்தைச்சூரி சூரணம் பயன்கள்
நத்தைச் சூரி பூண்டு வகையைச் சார்ந்தது. இதன் வேர் மற்றும் விதை மருத்துவப் பயன் கொண்டவை. வேர் நோய் நீக்கும் தன்மை கொண்டது.
நத்தைச்சூரியின் விதையை லேசாக வறுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு 1 ஸ்பூன் அளவு எடுத்து பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை சாப்பிட, உடல் சூடு தணிவதுடன் உடலில் உள்ள தேவையற்ற இரசாயன வேதிப் பொருட்கள் வெளியேறும்.
சிறுநீரகக் கல்லடைப்பு :-
நத்தைச்சூரி சிறுநீரகக் கல்லடைப்பு ஏற்படாமல் தடுப்பதோடு இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். விதை, உடல் சூட்டைப் போக்கி உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். சீதபேதி, பெருங் கழிச்சலைப் போக்கும்.
மாதவிலக்கு மருந்து :-
பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் அதிக உதிரப் போக்கைத் தடுக்கும் வெள்ளைப் படுதலைக் குணமாக்கும்.
நத்தைச் சூரி வேரை பொடியாக்கி 10 கிராம் அளவு பசும்பாலில் கலந்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் தாய்ப்பால் பெருகும்.
நத்தைச்சூரி வேரை இடித்து 200 மி.லி. தண்ணீரில் கொதிக்க வைத்து 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி தினமும் 50 மி.லியாக நாள் ஒன்றுக்கு மூன்று வேளை குடித்து வர காய்ச்சல் மற்றும் நோயின் தாக்கம் குறையும்.
நத்தை சூரி விதையை லேசாக வறுத்து பொடியாக்கி தேனில் கலந்து குழைத்து தினமும் உண்டுவர உடலில் உள்ள வியாதிகள் நீங்கும். உலகத்தில் மூலிகை எல்லாவற்றிற்கும் சாபம் உண்டு ஆனால் “நத்தைச் சூரி” என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் இல்லை.
நத்தை சூரி விதைப்பொடி மர்றும் அனுக்கரா கிழங்கு பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் கலந்து உண்டு வர விந்து கட்டும்.
நத்தை சூரி விதை, பசும்பால் மற்றும் தண்ணீர்விட்டான் கிழங்கு சாறு இவற்றை கொதிக்க வைத்து பின்பு நத்தை சூரி விதையை பொடியாக்கி தினமும் உண்டு வந்தால் நெடுங்காலம் வாழலாம்.