பிரண்டை பயன்கள்
0

பிரண்டை பொடி பயன்கள்:

பிரண்டை பயன்கள், பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம்.
 பிரண்டை பயன்கள்
ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும். இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய்  அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்.

பிரண்டை  பயன்கள்:

பிரண்டை, கற்றாழை வேர், நீர், முள்ளி வேர், பூண்டு, சுக்கு, மிளகு, கடுக்காய் சம அளவு எடுத்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர உள்மூலம் குணமாகும்.
பிரண்டையை சிறு தீயில் இட்டு, வதக்கி சாறு பிழிந்து 30 மில்லி அலவு குடித்து வர முறையற்ற மாதவிலக்கு சீராகும். பிரண்டை வேரை உலர்த்து பொடி செய்து 1 கிராம் அளவாக காலை, மாலை கொடுத்து வர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.
பிரண்டைத் துவையல் செய்து நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள பழகிக் கொண்டால் உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும்; ஞாபக சக்தி பெருகும்; மூளை  நரம்புகளும் பலப்படும்.
இரைப்பை அழற்சி, அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற அனைத்து செரிமானம் பிரச்சினைகளுக்கும் பிரண்டை துவையல் மிகவும் சிறந்த மருந்தாக இருக்கிறது. மூலம் மற்றும் குடற்புழு நீக்குவதற்கு பிரண்டை நல்ல மருந்தாக விளங்குகிறது.

Nattu marunthu Kadai Near Me

 

 

Leave a Comment

Your email address will not be published.

0
X