மகிழ மரத்தின் வியக்கும் மருத்துவ குணங்கள் :
மலர்களைக் கொண்ட மரங்கள் நம் அன்னையைப் போன்றவை, நம் தேவை அறிந்து அவள் தன் உழைப்பை, தன் அர்ப்பணிப்பைத் தருவது போல, நறுமணம் கமழும் மலர்களைக் கொண்ட அரிய மரங்கள், நமக்கு அந்த நறுமணம் தரும் மலர்களைக் கொய்ய, அவற்றைத் தடி கொண்டு தாக்க வேண்டியதில்லை, நாம் அவற்றின் அருகே சென்றாலே, நறுமண மலர்கள் எல்லாம், நம் வழிகளில், மரங்களின் கீழே புத்தெழிலுடன் பூத்துக் கொட்டிக்கிடக்கும். அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த மரம்தான், மகிழ மரம்.
மலர்கள் தரும் மரங்கள் எல்லாம், தெய்வீக ஆற்றலுடன் தொடர்புடையவை, மகிழ மரங்கள், திருத்தலங்களில் தல மரமாக மட்டும் இல்லை, அவை புனிதத்தில், நல் ஆற்றலில், மனிதர்க்கு கல்வி கேள்விகளில் ஞானம் தரும் ஞான மரமாக, குரு மரங்களாகத் திகழ்கின்றன. வியாழக் கிழமைகளில் மகிழ மரத்தை வணங்கி வருவோருக்கு, அறிவுத்தெளிவு உண்டாகும் என பண்டைய சாத்திரங்கள் உரைக்கின்றன. புத்தரின் வாழ்வில் தொடர்புடைய புனித மரங்களில் ஒன்றாக மகிழ மரம் திகழ்கிறது, சமண சமயத்துறவிகளில் சிலர், மகிழ மரத்தடியில் ஞானோதயம் அடைந்துள்ளனர். ஜைன மதத்திலும், புனித மரமாக மகிழ மரம் போற்றப்படுகிறது.
மகிழ மரங்கள், வீடுகளில், பூங்காக்களில் மற்றும் சுற்றுலா மையங்களில், இவற்றின் அற்புத நறுமணத்துக்காகவும், அழகுக்காகவும், நிழல் தரும் தன்மைக்காகவும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. மகிழ மரங்கள் வெப்பமான வெளிப்புறத்தை குளிர்ச்சியாக்கும் தன்மை மிக்கவை, காற்றில் உள்ள தூசு நச்சுக்களை வடிகட்டி, நல்ல காற்றை அளித்து, சுற்றுச்சூழலைக் காக்கும் ஆற்றல் மிக்கவை.
நறுமணத்தை முகர்ந்தாலே, மனதிற்கு அமைதியையும் உற்சாகத்தையும் வழங்கக்கூடிய மகிழ மலர்கள், உடல் வலிமைக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. உடலை குளிர்வித்து, உடல் நச்சுக்களைப் போக்கும் வல்லமை மிக்கது.
பல் வியாதிகள் தீர்வில் மகிழ மர இலைகள் : கருவேலம் தூளில் தினமும் பல் துலக்கி, அதன் பின்னர், மகிழ மரத்தின் இலைகளைக் காய்ச்சிய நீரில், வாய்க் கொப்புளித்து வர, பல் தொடர்பான வியாதிகள் மற்றும் ஈறு பாதிப்புகள் அகலும். மகிழம் காயை வாயில் இட்டு மென்று துப்ப, பல் ஆட்டம் நீங்கும்.
உடல் வலிமைக்கு : மகிழ மலர்களின் மனதை மயக்கும் நறுமணம், திருமணமான தம்பதியரின் அன்னியோன்யத்தை அதிகரிக்கும் தன்மைமிக்கது. மகிழ மலர்களை பாலில் இட்டு காய்ச்சி, பனை வெல்லம் சேர்த்துப்ப் பருகி வர, உடல் வலிமையாகும்.
ஆண்மை மற்றும் கருப்பை பிரச்சனை : ஆண்மைத்தன்மை அதிகரிக்கும். மகிழ மரத்தின் பட்டைகள், உடலை வலுவாக்கும், பெண்களின் மாதாந்திர பாதிப்புகளை சரியாக்கும்.
தூக்கமின்மை :
இரவில் தூக்கம் வராதவர்கள், கீழ்க்கண்ட முறையைப் பின்பற்ற, நல்ல உறக்கம்
மகிழம்பூ தே நீர் : சிறிது மகிழம் பூக்கள் அத்துடன் சிறிது கொத்தமல்லி சேர்த்து, நீரில் இட்டு காய்ச்சி, வடிகட்டி, அந்த நீரை, தினமும் இரவு உறங்கும் வேளையில் பருகி வர, நிம்மதியான ஆழ்ந்த உறக்கம், உண்டாகும்.
இழந்த ஆண்மையை மீண்டும் மீட்டு தரும் அற்புத பூ!…
மாறிய வாழ்க்கை முறைகளால் பலருக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட்டுள்ளது.
மனதுக்கு இதமான மணம்வீசும் மலர்களில் மகிழம்பூ மிகச்சிறந்தது. மகிழ் என்றால் “மகிழ்ச்சியாக இரு” என்று பொருள். இந்தமல்ர் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தருவதால் சித்தர்கள் இதனை மகிழம்பூ என்றழைத்திருக்கிறார்கள்.
கைப்பிடி மகிழம்பூவை 2 கோப்பை தண்ணீரில் கொதிக்கவைத்து, சரிபாதியாகச் சுருக்கி வடித்து, காலை மாலை நேரங்களில் குடித்து வந்தால் உடலில் சூடு தணிந்து வலிமை பெற்று விளங்கும். மூன்று கைப்பிடிப் பூவை இதேபோல் வைத்து வடித்து, பால் சர்க்கரை சேர்த்து இரவு உணவுக்குப்பின் ஆண்கள் பருகினால் இல்லற இன்பம் கூடும். நல்ல திறனுண்டாகி உடலுறவுக்குப்பின் ஆயாசமும் களைப்பும் வராமல் தடுக்கும். பித்தம் சமன்படும்.
பூக்களை உலர்த்தி மெல்லிய பொடியாக்கி மூக்கில் பொடிபோடுவதுபோல் உறிஞ்சுவதால், மூக்கில் நிறைய நீர்வடிந்து நாற்றமடிக்கும் மண்டைப்பீனிசம் (Sinusitis), அது தொடர்பான தலைவலி மற்றும் வாயில் சுவையின்மை போன்றவை நீங்கி குணமாகும்.
இதன் விதைப்பருப்பைச் சேகரித்துப் பொடியாக்கி வேளைக்கு 3 கிராம் அளவு காலை மற்றும் மாலை நேரங்களில் பாலுடன் அருந்திவர தாது வளர்ச்சிபெறும். உடல் சூடு, நச்சு, மலச்சிக்கல் நீங்கும். ஒரு தேக்கரண்டி விதைப்பொடியை நெய்கலந்து காலை மற்றும் இரவு உணவுக்கு முன் கொடுத்தால் குடல் திறனிழந்து மலச்சிக்கலால் அவதிப்படும் வயதானவர்களின் தொல்லை நீங்கும். குடல் வலிமை பெறும். தேவைப்பட்டால் இரண்டு தேக்கரண்டிவரை சாப்பிடலாம். விதைகளை வெந்நீர் விட்டரைத்து நெல்லிக்காயளவு சாப்பிடுவதால் பாம்புக்கடி நச்சு முறியும்.
நாள்தோறும் காலை பல்துலக்கியதும் இளம் மகிழங்காய்களை மென்று சிறிது நேரம் கழித்து துப்பினால் பற்கள் இறுகி உறுதிப்படும். இதன் இலைகளைக் கசாயம் வைத்துப் பல்துலக்கியதும் வாய் கொப்பளித்துவந்தால் பல்நோய்கள் தீரும். இந்த மரப் பட்டையைக் கசாயம் வைத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் ஆறும். பற்கள் வலிமை பெறும். ஏ.வி.எம் முலிகை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிமையம் தயாரிக்கும் வசீகரா பற்பொடியில் இது சேர்க்கப்பட்டுள்ளது.
6 கிராம் அளவு பட்டையைச் சிதைத்து 250 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் கொதிக்கவைத்து 50 மில்லி லிட்டர் அளவு சுருக்கி வடிகட்டி தேன் 1 தேக்கரண்டி கலந்து காலை மற்றும் மாலை நேரங்களில் குடிப்பதால் பெண்களின் உடல் வலிமைக்குறைவு மற்றும் கருப்பை வலிமைக்குறைவு நீங்கிக் குழந்தைப் பேறு உண்டாகும்.
கூடுதல் தகவல்…மகிழமரம் இருக்கும் வீட்டில் செல்வ்வளம் கொழிக்கும்.