தேனைப் பயன்படுத்தி சருமத்தை பளபளக்கச் செய்யலாம்! எப்படி?
0

தேனைப் பயன்படுத்தி சருமத்தை பளபளக்கச் செய்யலாம் | Honey Beauty Tips in Tamil

சருமத்தின் அழகு மற்றும் மென்மையைத் தக்க வைக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் தேன். தேனானது நிச்சயம் அனைத்து வீடுகளிலும் இருக்கும். இத்தகைய தேனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தின் பொலிவு அதிகரிப்பதுடன், சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கிவிடும். அதிலும் கெமிக்கல் கலந்த அழகு சாதன பொருட்கள் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தினால், அப்போது தேனைக் கொண்டு சருமத்தைப் பராமரிக்கலாம்.அதுவும் தேனை தனியாகவோ அல்லது முட்டை, எலுமிச்சை போன்ற பொருட்களுடன் சேர்த்தோ சருமத்தில் பயன்படுத்தலாம். இதனால் அந்த பொருட்களில் உள்ள சத்துக்களும் சருமத்திற்கு கிடைத்து, சருமம் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும்.மேலும் தேனில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், அதற்கு முகப்பருவைப் போக்கும் சக்தியும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், தேனானது சருமத்தின் இளமை, மென்மை மற்றும் ஈரப்பதம் போன்றவற்றை தக்க வைக்கக்கூடியது.

nattu marunthu gor hair growth

தேன் மற்றும் எலுமிச்சை
சருமத்தில் படிந்துள்ள கருமை நிறத்தைதோ அல்லது பழுப்பு நிறத்தையோ போக்குவதற்கு, எலுமிச்சை துண்டை, தேனில் தொட்டு, நிறம் மாறி காணப்படும் இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த முறையை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

தேன் மற்றும் பால்
சருமத்தின் இளமையைத் தக்க வைக்க வேண்டுமா? அப்படியானால் இந்த முறையை பின்பற்றுங்கள். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் தேனில் 1/2 கப் பால் சேர்த்து கலந்து, அந்த கலவையைக் கொண்டு, தினமும் இரண்டு முறை கழுவி வாருங்கள். இதனால் நல்ல பலன் கிட்டும்.

தேன் மற்றும் தக்காளி
சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்குவதற்கு, தேனை தக்காளியுடன் சேர்த்து மாஸ்க் போடுவது நல்லது. இந்த முறையைக்கு தக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் தேன் சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தேன் மற்றும் ஆலிவ் ஆயில்
சருமத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால், அதனை மறைய வைக்க வேண்டுமானால், இந்த முறையை முயற்சி செய்யுங்கள். அதற்கு தேனில் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதனை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து 2 வாரத்திற்கு பின்பற்றினால், நல்ல மாற்றம் தெரிய வரும்.

தேன் மற்றும் தயிர்
சரும வறட்சியினால் அழகு கெடுகிறதா? அப்படியெனில் தேனில் தயிர் சேர்த்து சருமத்தை மசாஜ் செய்யுங்கள். இதனால் சரும வறட்சி நீங்குவதோடு, சருமமும் மென்மையாக இருக்கும்.

தேன் மற்றும் ஓட்ஸ்
பொலிவிழந்த சருமத்தை பொலிவாக்க, இந்த தேன் மற்றும் ஓட்ஸ் சிகிச்சை சிறந்ததாக இருக்கும். அதிலும் 2 டேபிள் ஸ்பூன் தேனில், 1 1/2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு சருமத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்தால், சருமத்தின் பொலிவிற்கு தடையாக சருமத்தில் இருந்த இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடும், மென்மையாகவும் இருக்கும்.

தேன் மற்றும் முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவில் தேன் சேர்த்து கலந்து, தொடர்ந்து ஒரு மாதத்திற்கு சருமத்தில் தடவி வந்தால், சருமத்தின் அழகானது பராமரிக்கப்படும்.

Leave a Comment

Your email address will not be published.

0
X