Badam Pisin Health Benefits in Tamil
பாதாம் பிசின்
Almond gum என்று ஆங்கிலத்திலும், பாதாம் கோந்து என்று ஹிந்தியிலும் பாதாம் பிசின் என்று தமிழிலும் அழைக்கப்படுகிறது. பாதாம் பிசின் துருக்கி, ஆப்கானிஸ்தான் பகுதியில் இருந்து தான் இந்தியாவிற்க்கு அதிக அளவில் இறக்குமதி ஆகிறது.
வட இந்தியாவோடு ஒப்பிடும்போது நமது பாதாம் பிசின் பயன்பாடும், அதனைப்பற்றிய அறிவும் குறைவு தான். பாதாம் மரப்பட்டைகளில் சேகரமாகிய பிசின் தான் பாதாம் பிசின். வெண்ணிறமாக ஒழுங்கற்ற உருவில் இருக்கும்.
பாதாம் பிசினை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால், முழுவதும் கரைந்து கண்ணாடி போல நீர்மம் கிடைக்கும். இதனை நம் விருப்பப்படி உணவுகளில் கலந்து கொள்ளலாம்.

- செர்ரி பழங்களை பாதுகாக்க உருக்கிய பாதாம் பிசினில் முக்கி எடுத்து பாதுகாப்பார்கள்.
- இதன் குளிர்ச்சியான தன்மையால், உடல்சூடால் அவதிப்படுபவர்கள் பாதாம் பிசினை பயன்படுத்துபவர்.
- வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும், எனவே தான் அல்சருக்கு சிறந்த மருந்து.
- வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல மருந்து.
- உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும்.
- வட இந்தியாவில் கோந்து லட்டு செய்து கர்ப்பிணி பெண்களுக்கு கொடுப்பர். இதன் சத்துக்களுக்காகவும், குளிர்ச்சி தரும் தன்மைக்காகவும் கொடுக்கிறார்கள்.
- எலும்புகளுக்கு உறுதியும் உடலுக்கு வலுவையும் தருகிறது.
- இயற்கையில் கிடைக்கும் பிசின் இதில் செயற்கை நிறமோ, மணமோ இல்லாததால் குழந்தைகள் உணவில், அதாவது ஐஸ்கிரீம், ஜெல்லியில் சேர்க்கிறார்கள்.
- பளு தூக்கும் வீரர்களுக்கு உடல் வலுவையும், எடையையும் அதிகரிக்க தினசரி உணவில் சேர்த்துக் கொடுக்கிறார்கள்.
பாதாம் பிசின் எப்படி சாப்பிடுவது
தேவையான அளவு பாதாம் பிசினை ஒரு பாத்திரத்தில் போட்டு அவைகள் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி விட்டு 8 மணி நேரம் கழித்து பார்த்தால் பாதாம் பிசின் ஜெல்லி போல காணப்படும். இதனுடன் பால், சக்கரை சேர்த்து சாப்பிட கீழ் கொடுக்கபட்ட மருத்துவ பலன்களை பெறலாம்.
பாதாம் பிசின் மருத்துவ பயன்கள்
தோல் மற்றும் எலுப்பு
பாதாம் பிசினில் உள்ள தாதுக்கள் தோல் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்க்கு உறுதியாக நின்று உடலில் தாது (மினரல்ஸ்) பற்றாக் குறையை போக்குகிறது. தோல் வரட்ச்சியை, வெடிப்புகளை குணமாக்கும்.
சிறு நீரக பாதிப்பு, நீர் வரட்ச்சி மற்றும் உஷ்ணம்
பெரும்பாலன காலங்கள் வெப்பமாகவே இருப்பதால் உடல் உஷ்ணம் அதிகமாகி அவதிக்கு ஆலாக்குகிறது, உஷ்ணத்தால் உடலில் நீர் பற்றாக் குறை ஏற்பட்டு சிலருக்கு வேறு சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுகிறது நீர் சுருக்கு, சிறுநீர் அடைப்பு, சிறு நீரக கல் போன்றவைகள். இதனை தவிர்க்க ஊரவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வர மேற்கூறிய உஷ்ண நோய்கள் தீரும்.
நெஞ்சு எரிச்சல், செரிமான கோளாறு
கால தாமத உணவு முறைகளால் உண்டாகும் நெஞ்செரிச்சல் (அசிடிட்டி) செரிமான கோளாரால் உண்டாகும் வயிற்று வலி போன்றவை நீங்க பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர குணமாகும்.
நோயால் உண்டான பாதிப்பை குணமாக்க
நீண்ட நாள் நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு உடலில் சத்து இன்றி மெலிந்து இருப்பார்கள், இவர்கள் வாரத்திற்க்கு மூன்று நாட்கள் பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வர உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் அத்துடன் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்கும்.
ஆண் மலட்டு தன்மை
ஆண் மலட்டு தன்மை உடையவர்கள் தினமும் இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து குடித்து வந்தால் நரம்புகள் வலு பெற்று மலட்டு தன்மை நீங்கும்.
குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு
குழைந்தை பெற்ற தாயமார்கள் உடலில் சக்தி இழந்து இருப்பர்கள் இவர்கள் பாதம் பிசின் கலந்த பாலை சாப்பிடுவதால் கருப்பையில் உள்ள நச்சு நீங்கி உடல் வலுவடையும், வட இந்தியாவில் குழைந்தை பெற்ற பெண்களுக்கு பாதாம் பிசின் கலந்த லட்டு இனிப்புகள் கொடுப்பது இன்றும் நடை முறையில் உள்ளது.
பாதாம் பிசின் சாப்பிடுவதால் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்கள் மற்றும் உடலுக்கு தேவையான சத்துக்களையும் கொடுக்கின்றது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.