அடிபட்டு மூட்டு ஜவ்வு கிழிந்து விட்டால்
0

அடிபட்டு மூட்டு ஜவ்வு கிழிந்து விட்டால் Mootu Javvu Maruthuvam

கேள்வி: கீழே விழுந்ததில் கால் மூட்டில் ஜவ்வு கிழிந்து விட்டது. என்ன மருந்து முயற்சி செய்யலாம்.

பதில்: நீங்கள் எந்த மருந்து உள்ளுக்குள் எடுத்து கொண்டாலும் வெளிப்புறத்தில் கீழ்கண்ட முறையில் பற்று போட்டால் இரண்டு மூன்று நாட்களுக்கு வலி இருக்கும். பின்னர் சிறிது சிறிதாக வலி குறைவதை உணரலாம். எளிய முறை. முயற்சி செய்து பாருங்கள்.

மூட்டு சவ்வு கிழிந்ததற்கான மருந்து :
நாட்டு பாக்கு10, புளியங்கொட்டை 10, இவை இரண்டையும் நன்றாக ஊற வைத்து தண்ணீர் விடாமல் அம்மியில் அரைத்து முட்டை வெள்ளைக் கருவுடன் கலக்கி முட்டியில் பற்று போடவும்.

வெள்ளை துணியால் பற்று கீழே விழாமல் கட்டி துணியின் மீது நல்லெண்ணைய் சிறிது ஊற்றவும். அது காய்ந்த பின் மறுபடியும் எண்ணை ஊற்றவும். இப்படியே செய்து வந்தால் உடைந்த ஜவ்வு கூடும். 3 நாட்களுக்கு ஒரு முறை பழைய கட்டை பிரித்து விட்டு வென்னீரில் காலை கழுவிய பின் மீண்டும் பத்து போடவும்.

காலுக்கு ஓய்வு அவசியம். முட்டியை அசைப்பதை தவிர்க்கவும்.

நாட்டுமருந்து .காம் இணையத்திற்க்காக

நலம் வாழ:
திருமதி ஈஸ்வரி

 

தரமான மூலிகை பொருள்கள் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published.

0
X