mugam alagu tips in tamil
உங்களின் முகம் பளிங்குபோல் ஜொலிக்க இயற்கை அழகு குறிப்புகள்
எல்லோருக்கும் தங்களது முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை தான் இருக்கும். ஆண்களாக இருந்தாலும் சரி. பெண்களாக இருந்தாலும் சரி. அழகை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. இந்த அழகினை இயற்கையாக பெற வேண்டும் என்றால் என்ன செய்வது? முதலில் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பழச்சாறுகளை, தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பலவகை, ஒரு காய் வகை, ஒரு பழச்சாறு இவை மனித உடலுக்கு கட்டாயம் தேவை. ஒரே வகையான உணவு பழக்கவழக்கங்களை வைத்துக் கொள்ளாமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பழம், ஒவ்வொரு காய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கும் நல்லது. சரும அழகிற்கும் நல்லது. இது தவிர இயற்கையான இந்த நான்கு பொருட்களை வைத்து, நம் முகத்தை எப்படி அழகாக மாற்றலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கஸ்தூரி மஞ்சள்: இதற்கு காட்டு மஞ்சள் என்ற மற்றொரு பெயரும் உள்ளது. நம் முகத்தில் உள்ள முகப்பரு, வியர்குரு, கட்டி, வறட்சித் தன்மை இவைகளை நீக்கும் தன்மையானது இந்த கஸ்தூரி மஞ்சளுக்கு உள்ளது. தேமல், அரிப்பு போன்ற தோல் பிரச்சனைகளையும் நிரந்தரமாக தீர்க்கும். தினம்தோறும் இதை உடம்பு முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் நம் தோலினுள் ஊடுருவி உடலில் துர்நாற்றம் வீசாமல் நம்மை எப்போதும் மனமாக வைத்திருக்கும்.
mugam alagu tips in tamil
பாசிப்பயறு மாவு: பச்சை பயறு அல்லது பாசிப் பயறு என்று சொல்லுவார்கள். உடம்பில் உள்ள அழுக்குகளை நீக்கக் கூடியது. உடலை குளிர்ச்சி செய்யக் கூடியது. எந்தவிதமான பக்க விளைவுகளும் நம் சரும தோலை பாதிப்பு அடைய வைக்காமல் பாதுகாத்து மென்மையாக வைத்திருக்கும்.
குப்பைமேனி இலை சாறு: இது ஒரு கிருமிநாசினி. இரும்புச்சத்து அதிகம் உள்ள ஒரு தாவரம். நம் சருமத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும் சக்தி இந்த தாவரத்திற்கு உள்ளது. சுற்றுப்புற சூழல் மாசுபாட்டினால் நம் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் சக்தியானது இந்த குப்பைமேனி இலைச் சாறுக்கு உள்ளது.
mugam alagu tips in tamil
நாட்டு மாட்டு பசும்பால்: தினம்தோறும் இதை இரவில் ஒரு டம்ளர் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் அவசியம். எலும்புகளை உறுதிப்படுத்தும். அதோடு மட்டும் இல்லாமல் இந்த பாலை கலவையில் ஊற்றி கலக்கும்போது நம் சருமத்திற்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதால் இதனை உபயோகப்படுத்தி கொள்கின்றோம்.
கஸ்தூரி மஞ்சள்-15 கிராம் பாசிப்பயறு மாவு-25 கிராம் குப்பைமேனி இலை சாறு-10ml நாட்டு பசும்பால்-இந்த கலவையை கலக்க தேவையான அளவு. mugam alagu tips in tamil
மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை, மேலே சொல்லப்பட்டிருக்கும் அளவில், ஒன்றாக சேர்த்து தேவையான பால் விட்டு முகத்தில் பூசிக்கொள்ள பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளவும். முதலில் வெதுவெதுப்பான சுடுநீரில், முகத்தை நன்றாக கழுவிய பின்பு, இந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி விட வேண்டும். இதை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால், மூன்றே மாதங்களில் உங்களது சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணரலாம். குறிப்பாக கண்ணுக்குக் கீழே இருக்கும் கருவளையம் நீங்கி, தோல் சுருக்கம் நீங்கும்.
mugam alagu tips in tamil
Keywords: முகம் அழகு பெற டிப்ஸ், mugam alagu tips in tamil, இயற்கை அழகு குறிப்புகள், mugam azhagu kurippu in tamil, face brightness tips in tamil, azhagu kurippu in tamil 2020, kerala beauty tips in tamil, beauty tips in tamil, mugam polivu pera tips in tamil. aangal mugam polivu pera tamil.
மேலே குறிப்பிட்ட பொருள்கள் வேண்டுமா கிளிக் பண்ணுங்க : Nattu Marunthu kadai Online