சித்தர்கள் சொன்ன கொரோனாவை அழிக்கும் உணவுகள்: Nattu Marunthu for coronavirus :
தீவிரமடைந்து வரும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும். நமது உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் உணவு பொருள்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு பொருள்களையும் சத்தானதாகத்தான் எடுத்துகொள்கிறோம்.
ஆனால் உரிய முறையில் திட்டமிட்டு எடுத்துகொள்வதன் மூலம் ஆயுள் முழுமைக்கும் நோய் நொடியின்றி நலமாக வாழலாம். ஆம், ஆரோக்கியமான உணவுகள் என்று பல உணவுகள் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கீரைகள், புரதம் நிறைந்த இறைச்சிகள். உலர் பருப்புகள், பால் பொருள்கள், கொட்டைகள் என சத்திலும் சத்து மிக்க உணவுகள் பலவும் உண்டு
நோய் தடுப்பு மருத்துவத்தில், சித்தர்கள் பெரிதும் குறிப்பிடுவது உணவும், மூலிகை மருத்துவமும் தான். சித்தர்கள், உணவை இரு வகையாகப் பிரித்தனர்.
1 அமுதமாகும் உணவு
2 மருந்தாகும் உணவு
அன்றாடம் சாப்பிடும் உணவில், நஞ்சு கலக்காமல், முழுமையாக, அமுதம் எனும், நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும். மற்றொன்று, மருந்தாகும் உணவு.
கொரோனா என்ற கொடிய நோயை, நம் அன்றாடம் சாப்பிடும் அமுதம் எனும், உணவு மூலமாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா வைரசை தடுக்க இயலும்
அமுத உணவு
கட்டாயம் துாதுவளை, மல்லி, புதினா சேர்ந்த துவையல் செய்து, நெய் சேர்த்து, இரண்டு பிடி சாதத்துடன் சாப்பிடுவது மிக மிக நல்லது.
மாலை, 6:00 மணிக்கு, கற்பூர வல்லி இலைகள் ஐந்தை சுத்தம் செய்து, கடலை மாவு கரைசலில், பஜ்ஜி போல் செய்து, இரண்டு அல்லது மூன்று சாப்பிடலாம்.
அத்துடன் இஞ்சி, 1 துண்டு எடுத்து மேல் தோலை சீவி நசுக்கி, ஒரு குவளை கொதிநீரில் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி பருக வேண்டும்.
இரவு, 8:00 மணிக்கு பப்பாளி, ஆப்பிள், திராட்சை, கொய்யா போன்ற பழங்களை துண்டுகளாக்கி, ஒரு கப் சாப்பிட வேண்டும்.
இரவு, 9:00 மணிக்கு, இரண்டு சப்பாத்தி, உப்புமா, சாம்பார் சாதம் அல்லது வெஜிடபிள் சாதம் ஆகியவற்றில், ஏதாவது ஒன்று சாப்பிட வேண்டும்.
இரவு படுக்கும் முன், பாலில், இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடி, மூன்று பூண்டு பற்கள் நசுக்கிப் போட்டு, காய்ச்சி பருக வேண்டும். மஞ்சளில் உள்ள, ‘குர்குமின்’ எனும் வேதிப்பொருள், மிகச்சிறந்த கிருமி நாசினி மட்டுமின்றி, நுரையீரல் கவசமாகவும் விளங்குகிறது.
இந்த அமுத உணவு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து கொரோனா வைரஸ் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். எல்லாரும் பயன்படுத்துங்கள்; கொரோனாவை நம் பாரம்பரியம்படி வெல்லுங்கள்!
விளம்பரம் : முதல் தரமான நாட்டுமருந்துகள் வாங்க இங்கு கிளிக் செய்யவும்.