சீந்தில் கொடி சித்த மருத்துவ பயன்

சீந்தில் கொடி!!!!

சாகாமூலிகை, காயகற்ப மூலிகையான இது ஒரு ஒட்டுண்ணி. சீந்தில் கொடி படரும் தாவரத்தின் பாதி பலத்தினை எடுத்துகொள்ளும். இது உயிர் கொல்லி நோய்களான புற்று நோய், எய்ட்ஸ் நோய்களுக்கு அரு மருந்தாக செயல்படுகிறது.

மூட்டுவலிகளை முழுமையாக சரிசெய்யும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் இந்த சீந்தில்.

கல்லீரலைப் பலப்படுத்தக் கூடியது. உடல் தேற்றியாக விளங்குவது. காம உணர்வைத் தூண்டக் கூடியது. வயிற்றுக் கோளாறுகளை வேரறுக்கக் கூடியது.

இப்படி பல எண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது சீந்தில் கொடி.Heart Leaved Moonseed Powder

நூல் ஆதாரம் :

போமென்ற பொற்சீந்தி யானால் நன்று
புகழான சிவப்புநன்று கருப்புநன்று
நாமொன்று கிடையாவிடால் நல்ல சீந்தில்
நறுக்கியே துண்டுதுண்டாய் கிழித்துப் போட்டு
ஏமேன்ற நி நிழலுலர்த்தி யிடித்துத் தூளாய்
யேற்றமாய் வடிகட்டிச் சூரணமே செய்து
தாமென்ற நாலிலொன்ரு சர்கரையே கூட்ட
சமத்தாக மண்டலந்தான் வெருக்கடிதூள் கொள்ளே

கொள்ளவே காமப்பா லுடம்பி லூறுங்
கணக்கான அமிர்தஞ் சீவி தானே.

கொள்ளவே சஞ்சீவி சூரணத்தைச் சொல்வேன்
குணமான சீந்திலடித் தண்டுவாங்கி
விள்ளவே மேற்றோலை வாங்கிப்போட்டு
வெருளாதே நறுக்கியதை யுலரப்போட்டு
கள்ளவே யிடித்து நன்றாய்ச் சூரணித்துக்
கருவாக வடிகொண்டு படித்தூள்வாங்கி
நல்லாவே முந்நூற்றில் சுத்திசெய்து
நலமான பொடிபடிக்கு ஆவின்பாற்படியே

படியாக வரைப்படிதான் சீனிபோட்டு
பாங்காக ரவியுலர்த்திக் காய்ந்தபின்பு
அடியாக உரலிலிட் டிடித்துக்கொண்டு
அப்பனே சாதிக்கரங் சாதிபத்திரி
கடியாக வால்மிளகு ஏலங்கிராம்பு
கசகசா தாளிசமு மாசக்காயும்
வடிவாக வவைக்குவெரரு பலந்தான் கூட்டே

கூட்டியே யிரண்டுமொன்றாய் சேர்த்துக்கொண்டு
குறையாம லாறுபலஞ் சீனிசேர்த்து
நாட்டியே வொருகடிதா ணெய் யிற்கொள்ள
நலமாகத் தீருநோய் நவிலக்கேளு
தாட்டிகமா மேகநீ ரிருபதும்போம்
தளமான பிரமியங்கள் மேகமெல்லாம்
வாட்டியே வற்றியதோர் தேகமெல்லாம்
வளமாகு மச்திசுரம் வெட்டைபோமே

போமப்பா மூலத்தின் சூடுபோகும்
பொல்லாத தத்தவகை எல்லாம்போகும்
நாமப்பா கண்னெரிவு கைகால்காந்தல்
நாடாது தேகமெல்லாங் குளிர்ச்சியாகும்
தாமப்பா வூரலெல்லாந் தவறுண்டேபோம்
தளமான கபாயித்தின் ரணங்கள் தீரும்
வெகுசுருக்காய் பனவெடையப் பிரேகங் கொள்ளே

என்றும் நலம்வாழ
ஈஸ்வரி.

 

சீந்தில் கொடி வாங்க இங்கு கிளிக் செய்யவும்

One thought on “சீந்தில் கொடி சித்த மருத்துவ பயன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *