நீர்க்கடுப்பை போக்கும் வெங்காயம்
0

நீர்க்கடுப்பை போக்கும் வெங்காயம் Neer Kaduppu:

கோடையில் அனைவரையும் தாக்கும் நோய் என்றால் அது நீர்க்கடுப்பு ஆகும். அதை எளிதில் வீட்டில் உள்ள வெங்காயத்தை வைத்தே குணப்படுத்த முடியும்

வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும்.

இவர்கள், ஒரு சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம்.

சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

Leave a Comment

Your email address will not be published.

0
X