நீர்முள்ளி :
நீர்வளம் நிறைந்த இடங்களிலும், வயல் வரப்புகளிலும் ‘நீர்முள்ளி’ வளரும். இது குத்துசெடி வகையை சார்ந்தது. இதன் விதைகள் அடந்த பழுப்பு நிறத்தில் காணப்படும். விதையை தூளாக்கி தண்ணீரில் கலக்கினால், பசை போன்று ஆகிவிடும். இந்த விதை ஆண்களுக்கு மிகுந்த ஆற்றலைத் தரும். உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் சிறப்பு குணம். இதில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.
இரத்தசோகை ஏற்படும்போது உடல் வீங்கும். அதிக சோர்வு தோன்றும். மேல் மூச்சு வாங்குதல் மற்றும் இளைப்பு ஏற்படும். அப்போது நீர்முள்ளி குடிநீர் தயாரித்து 100 மி.லி. வீதம் தினம் காலை, மாலை இருவேளை குடித்துவரவேண்டும். குடித்தால், வீக்கம் குறைந்து உடலில் ரத்த அணுக்கள் அதிகரிக்கும். உடல் பலமடையும். நீர் முள்ளி ரத்த சோகையை போக்கும் என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடலில் வாதத்தன்மை தோன்றும்போது மூட்டுவலி ஏற்படும். இந்த வலியை போக்கி, மூட்டுகளுக்கு அதிக உறுதியை கொடுக்கும் ஆற்றலும் நீர்முள்ளி குடிநீருக்கு உள்ளது. இது, உடல் உள் உறுப்பு வீக்கங்களையும் போக்கும்.
நீடித்த வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகிறவர்கள், அரை தேக்கரண்டி நீர்முள்ளி விதை பொடியை 200 மில்லி லிட்டர் மோரில் கலந்து காலை, மாலை ஒரு வாரம் பருகினால் நோய் குணமாகும்.
நீர்முள்ளி விதை உடலுக்கு குளிர்ச்சியளிக்கக் கூடியது. உடல் சூட்டால் உண்டாக கூடிய மேகநோய்கள், நீர் சுளுக்கு, நீர் எரிச்சல், சிறுநீரக தொற்று நோய்கள் மற்றும் கல்லடைப்புக்கு இது சிறந்த மருந்து. சிறுநீரகத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள்கொண்டு வரும். உடலுக்கு சக்தி அளிக்கும் மருந்துகளிலும், தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் மருந்துகளிலும் நீர்முள்ளி விதை சேர்க்கப்படுகிறது. விதை மட்டுமின்றி அதன் வேரும், இலையும்கூட மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.
நீர்முள்ளி குடிநீர் சூரணம் என்பது விசேஷ குணம் கொண்டது. இதில் நீர் முள்ளி, நெருஞ்சில், சுரைக்கொடி, வெள்ளரி விதை, மணத்தக்காளி வற்றல், சோம்பு, கொட்டை நீக்கிய கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சரகொன்றை புளி, பறங்கிச்சக்கை போன்றவை சேர்க்கப் படுகின்றன. இது நோய்களை தீர்த்து உடலுக்கு பலத்தை தரும்.
எடையைக் குறைக்கும் நீர்முள்ளி:
அதிக உடல் எடை என்பது, உட்கார்ந்து எழும்போதும், நடக்கும்போதும் ஏற்படக்கூடிய உடல் பாதிப்பு மட்டுமல்ல. அது மன ரீதியிலும், அழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களை இயங்கவிடாமல் முடக்கி, தனிமைப் படுத்திவிடுகிறது. உடல் எடையைக் குறைக்க பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறு, பட்டினி கிடப்பது மற்றும் உணவைக் குறைத்து சாப்பிடுவதாகும், இதன்மூலம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல், உடல் நலம் குன்றி, சோர்ந்து விடுகின்றனர்.
நீர் முள்ளி மருத்துவ பயன்
1. நீர் முள்ளியின் சமூலத்தை (முழுச் செடி) கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்
2. சிறுநீரகக் கல் அடைப்பு உள்ளவர்கள் இந்தக் கஷாயத்தை காலை மாலை என அருந்தி வந்தால் கல் கரைந்து சிறுநீருடன் வெளியேறி விடும்
3. நீர் முள்ளியுடன் திரிபலாச் சூரணம் சேர்த்து கஷாயம் செய்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும்.
4. வாயுக்களின் சீற்றத்தாலும் செரிமானக் கோளாறுகளாலும் ஏற்படக்கூடிய வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்த இதன் இலைகளைக் கஷாயம் செய்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
5. மாதவிலக்குக் கோளாறு உள்ள பெண்களும் வெள்ளைப்படுதலால் அவதிப்படும் பெண்களும் நீர் முள்ளிக் கஷாயத்தைக் குடித்து வந்தால் முழுமையான நிவாரணம் கிடைக்கும்
6. நீர் முள்ளி விதையுடன் முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருகி தாம்பத்யத்தில் முழு பலன் கிடைக்கும். இதன் விதையைத் தனியாக அரைத்துப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்
7. இதன் விதையைப் பொடியாக்கி ஒரு வேளைக்கு அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு, நீர் கோத்தல், இரைப்பிருமல், மேக நோய் போன்றவற்றைக் குணப்படுத்துவதுடன் ரத்தத்தைச் சுத்திகரித்து ஆண்களுக்கு உயிரணு ஊறச் செய்யும்.
8. நீர் முள்ளி விதையை ஐந்து விரலால் அள்ளும் அளவு எடுத்து இரவில் ஒரு செவ்வாழைப் பழத்தின் உள்ளே வைத்து விட வேண்டும். அதை மறுநாள் காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும். இப்படி 30 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தாது பலப்பட்டு தாம்பத்யம் சிறக்க உதவும். இதேபோல் அமுக்கராங் கிழங்கு, ஓரிதழ் தாமரை, பூனைக்காலி விதை, ஜாதிக்காய், தண்ணீர்விட்டான் கிழங்கு மற்றும் நீர் முள்ளி விதை அனைத்தையும் சம அளவு எடுத்துத் தூளாக்கி கோலிக்குண்டு வருமளவு எடுத்து தேனுடன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் ஆண்மை பலம் கிடைக்கும்.
அறிய மற்றும் அனைத்து மருத்துவ பயன்களை கொண்ட நிமுள்ளி வாங்க இங்கு கிளிக் செய்யவும்