தீராத சளியை விரட்ட வீட்டு வைத்தியம்
0

தீராத சளியை விரட்ட வீட்டு வைத்தியம் : Tips for Cold and Cough in Tamil

இடைவிடாமல் பாடாய்ப்படுத்தும் உடல் உபாதைகளில் சளியும், இருமலும் முக்கியமானது.
இதற்கு பருவ நிலை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. நமது தொண்டையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் தந்து நம்மை எரிச்சலூட்ட செய்கிறது.

அதை விரட்டியடிக்க பக்க விளைவுகள் இல்லாத எளிய வீட்டு வைத்தியம்.
1.வெள்ளை கல்யாண முருங்கை இலை சாறு ஒரு அவுன்ஸ், 2. வெள்ளை வெங்காய சாறு ஒரு அவுன்ஸ், 3. புழுங்கலரிசி சோறு வேகும் போது கொதிக்கும் நீர் இரண்டு அவுன்ஸ், ஆக நான்கு அவுன்ஸ் சாறை நன்கு கலக்கி காலை வேளை வெறும் வயிற்றில் இளஞ்சூடாக பருகிவந்தால் நாள்பட்ட இரைப்பு, காசம், ஷயம் போன்ற தொல்லைகளில் இருந்து பூரண குணமாகலாம். எளிய முறை முயற்சி செய்து தான் பாருங்களேன்.

பத்தியம்
மாமிச உணவு, போகம் கூடாது.

நூல் ஆதாரம்.
நோயும் மருந்தும்

 

 

நமது இணையத்திற்காக :
நலம் வாழ
திருமதி : ஈஸ்வரி

முதல் தரமான நாட்டு மருந்துகள் வாங்க இங்கு கிளிக் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published.

0
X