இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள் – நல்ல தூக்கம் வர

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள் : நல்ல தூக்கம் வர 

தூக்கமின்மை
தூக்கமின்மை என்பது நம்மில் நிறையபேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகும். அல்லது தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட அனைவரும் படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு நமது தூக்கமின்மையை போக்க முயற்சி மேற்கொள்வோம்.

அப்படி தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்து தவிக்கும்போது ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ணவேண்டும். நூறு எண்ணி முடிக்கிறத்துக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவாகஇருக்கும்னு, நினைக்கிறீங்களா? வேற ஒண்ணுமல்ல. குழப்பம்தான். சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறத்துக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாலும் கூட தூக்கம் வராது. ஆனால் இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள்.

செர்ரி பழங்கள்
மெலடோனின் என்ற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் இந்த செர்ரிப்பழங்கள். இதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்

வாழைப்பழம்
இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் வாழைப்பழத்துல நிறைய இருக்கு. இது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் என்கிற அமிமோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது. இந்த எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலமானது. மூளைக்குள்ளே சென்று 5 எச்.டி.பி என்கிற ரசாயனமாக மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 எச்.டி.பியானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்
நாம பொதுவா காலை உணவாக அதிகம் சாப்பிடுகிறது டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.

ஓட்ஸ் மீல்
ஓட்ஸ் கஞ்சியினு சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட்ஸ் மீல்சொல் சொல்லுவாங்க.

கதகதப்பான பால்
உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேற்கண்ட 4 உணவுகளும் புதிதானது.பால் மட்டும் பழசுதான்.

நல்ல தூக்கம் வர

நல்ல தூக்கம் வர டிப்ஸ் : 

சித்த மருத்துவப் புரிதலின்படி இரவில் சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கு உடல்வலி, அசதி, உணவு செரியாமை, கொட்டாவி, சோம்பல் ஆகியவை வரும். சித்த மருத்துவத்தின் முக்குற்ற இலக்கணப்படி பார்த்தால் மேலே சொன்ன அத்தனை குறிகுணங்களும் வாதத்தாலும் பித்தத்தாலும் வருபவை. சீறிப்பாய்ந்து வரும் இந்த நாடிகளை அமைதிப்படுத்தும் தலையாய வாழ்வியல்முறை எண்ணெய்க் குளியல்.

இதற்கு சுக்குத் தைலம், கீழாநெல்லித் தைலம் ஏற்றவை. இல்லாவிட்டால் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் போதும். எண்ணெய்க் குளியல் செய்தால் வாதத்தை விரட்டித் தூக்கத்தை வரவேற்கும். நம் மரபும் பாரம்பர்யமும் கூறும் நலப்புரிதலும் அதுவே. நம் மூதாதையர் பல தலைமுறைகளாகப் பின்பற்றி அதை நம்மிடம் ஒப்படைத்து இன்னும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்லச் சொன்ன விலைமதிப்பிலா பொக்கிஷம் அது.

பிரமி நெய் உண்ணலாம். இது ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்கும்.

⦁சங்குபுஷ்பம் சேர்ந்த மருந்துகள்

⦁அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்து தூங்கச் செல்வதற்கு அரைமணி நேரத்துக்கு முன் குடித்தால் நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

⦁ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை தூங்கச் செல்வதற்கு முன் பாலில் கலந்து குடிப்பது தூக்கத்தை அரவணைக்கும் அரும்பெறும் மருந்து.

⦁சடாமாஞ்சில் சூரணம் மனதின் தடுமாற்றத்தை நீக்கி எண்ண அலைகளின் ஓட்டத்தை அதிகப்படுத்தி இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்கும்.

⦁வசம்பு உடல் நரம்புகளை ஆசுவாசப்படுத்தி தூக்கத்தைக் கொடுக்கும்.

உடலையும் மனதையும் பேணிக்காத்து வலிமையாக்குவோம். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மனதை அலங்கரிக்க, தெளிவையும் அமைதியையும் அதற்குப் பரிசாக்கி துயில் கொள்வோம்… இரவில் சுரக்கும் மெலட்டோனினுடன் மெய்ம்மறந்து..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *