`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்!’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு

கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம் | Nattu Marunthu for  coronavirus | Coronil :

உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவுகிறது என்னும் தகவல் மக்களை பீதியடைய வைத்துள்ளது. கேரளாவைத் தொடர்ந்து டெல்லியில் கொரோனா பாதிப்பு இருப்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம். Nattu Marunthu for coronavirus

 

Nattu Marunthu for coronavirus

“கடந்த சில ஆண்டுகளாக வெவ்வேறு வைரஸ் தாக்குதலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக நுரையீரல் பாதிக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிக்குன்குனியா காய்ச்சலின்போது மூட்டு பாதிப்பு இருந்தது. டெங்குக் காய்ச்சலின்போது ரத்த தட்டணுக்கள் குறைந்தன. தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. உணவே மருந்து, மருந்தே உணவு என்ற கோட்பாட்டின்படி கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள சித்தர்கள் கண்டறிந்த உணவுகள் நம்மிடம் உள்ளன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவில் இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. அதனால் இந்த வைரஸை தமிழகப் பெண்களின் சமையலறையிலிருந்தே விரட்டிவிடலாம். அதனால் தமிழக மக்கள், கொரோனா வைரஸ் குறித்து பயப்பட தேவையில்லை. ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் துணையோடு இந்த வைரஸின் பாதிப்பிலிருந்து மக்கள் எளிதாக மீளலாம். அதற்கு நாம் உண்ணும் உணவோடு சில மருந்துகளையும் உட்கொள்ள வேண்டும். Coronil online

நுரையீரலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ஆடாதொடை 5 இலைகள், சிற்றரத்தைச் சிறிதளவு, அதிமதுரம் சிறிதளவு, மிளகு 5, திப்பிலி 2 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு கசாயம் தயாரிக்க வேண்டும். இந்தக் கசாயத்தை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் பருக வேண்டும். 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 20 மிலியும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு 60 மிலியும் கொடுக்கலாம். மதிய உணவில் இஞ்சி, பூண்டுகளை அதிகம் சேர்த்து புதினா, கொத்தமல்லி துவையல் செய்து சாப்பிடலாம். மாலையில், தூதுவாளை, மஞ்சள், சீரகம், மிளகு ஆகியவற்றை கொண்டு தூதுவாளை சூப் செய்து பருகலாம். Nattu Marunthu for coronavirus

அடுத்து, வாரத்தில் ஒருநாள் வாழைத்தண்டை சாப்பிட வேண்டும். வாரம் ஒரு முறை நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். சித்த மருத்துவக் கடைகளில் கபசூர குடிநீர், விஷ சூர குடிநீர் விற்கப்படும். அதையும் பருகினால், உங்கள் அருகே கொரோனா வைரஸ் வர பயப்படும். சளி, காய்ச்சல் இருந்தால் சித்த மருத்துவர்கள், ஆங்கில மருத்துவர்கள் ஆகியோரின் ஆலோசனைப்படி மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆங்கில மருத்துவத்தில் நோய் குறித்த ஆய்வுகள் அதிகம். சித்த மருத்துவத்தில் நோய் தடுப்பு குறித்த மருந்துகள் அதிகம். Coronil

சித்த மருத்துவத்தையும் ஆங்கில மருத்துவத்தையும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஒரே நேரத்தில் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் வராது. ஆனால், சித்த மருத்துவத்துக்குச் செல்வதற்கு முன் அவர்கள் உண்மையான சித்த மருத்துவர்களா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமான சமயத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் தமிழக சித்த மருத்துவர்களை அங்கு அனுப்பியிருப்பார். அதன்மூலம் தமிழக சித்த மருத்துவத்தின் புகழ் உலகம் முழுவதும் பரவியிருக்கும். அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், சுகாதாரமற்ற அசைவ உணவுகளைத்தான் சாப்பிடக் கூடாது. கொரோனா வைரஸிலிருந்து நம்மை ஆடாதொடை, தூதுவாளை, கபசூர குடிநீர், விஷ சூர குடிநீர், நிலவேம்பு ஆகியவை நிச்சயம் பாதுகாத்துக் கொள்ளும். அரசு விரும்பினால் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவத்தை இலவசமாகப் பார்க்க நான் தயாராக உள்ளேன்” என்றார்.

 

நன்றி
விகடன்

நாட்டுமருந்து ஆன்லைன் -ல் வாங்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

 

Natt Marunthu Kadai Near Me

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *