Author: admin

|

பப்பாளி இலையில் உள்ள நன்மைகள்

அன்றாடம் நாம் சாப்பிடும் பழங்களில் இருக்கும் மருத்துவ நன்மைகளை விட அதன் இலை, பூ, பட்டை, வேர் இது போன்ற மற்ற பாகங்களிலும் அதிகமாக நிறைந்துள்ளது. அந்த வகையில், பப்பாளி இலை முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த இலையில் ஃபைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமிகளும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிகமாக உள்ளது. எனவே பப்பாளி இலையில் ஜூஸ் செய்துக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்….

|

ஆவாரம் பூ பயன்கள்

பெரும்பாலான தாவர வகைகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உடலில் ஏற்படும் பாதிப்புகளை போக்கும் மருத்துவ குணங்கள் அதிகம் இருக்கின்றன. தாவரங்களின் வேர், இலை, மரப்பட்டை, காய், கனி போன்றவை மருத்துவத்திற்காக பயன்படுகின்றன. சில தாவரங்களின் பூக்கள் மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றன. “ஆவாரம் பூ” அப்படிபட்ட மருத்துவ குணம் நிறைந்த ஒரு பூ வகை ஆகும். “ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ” எனும் பழமொழி ஆவாரம் பூவின் மருத்துவ குண மகிமையை கூறுகிறது. இந்த ஆவாரம் பூ பற்றிய…

|

குப்பை மேனியின் மருத்துவ குணங்கள்

குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றதாக மூலிகை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அரிமஞ்சிரி, அண்டகம், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, போன்ற பெயர்களும் இதற்கு உண்டு. இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். காடுமேட்டில் எங்கும் காணப்படுகிறது. இதை யாரும் வளர்ப்பதில்லை, காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது. சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள்…

மூலிகைப் பொடிகளின் பயன்கள்

அனைத்து வகையான மூலிகை பொடிகளின் முழு பயன்களையும் ஒரே இடத்தில அறியலாம்.  இந்த பொடிகளை இயற்கை மணம் மற்றும் பாரம்பரிய தன்மையோடு வாங்க www.nattumarunthu.com என்ற இணையத்தை அணுகவும் அருகம்புல் பொடி அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி. நெல்லிக்காய் பொடி பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது. கடுக்காய் பொடி குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். வில்வம் பொடி அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது. அமுக்கலா பொடி தாது புஷ்டி,…

வசம்பு இருந்தால் போதும்; இயற்கை முறையில் நோய்களுக்கு தீர்வு பெற.!

வசம்பு காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; பசியுண்டாக்கும்; வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு மருந்தாகும். வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க  வேண்டியது அவசியம். வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும்  நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே…

சித்த மருத்துவத்தில் புற்றுநோயை எதிர்க்கும் நித்திய கல்யாணி மலர்கள்!

நித்தியகல்யாணி நித்தியகல்யாணி மலர்கள், ஐந்து இதழ்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறமானவை. நுனியில் 2, 3  கொத்துக்களாகக் காணப்படும். எல்லா பருவங்களிலும் இந்த தாவரம் பூத்துக் குலுங்குவதால் நித்ய கல்யாணி என்கிற பெயரைப்  பெற்றது. நித்தியகல்யாணி பழங்கள் இரட்டையானவை. நிறைய விதைகளுடன் கூடியவை. காக்கைப் பூ, சுடுகாட்டுப் பூ, சுடுகாட்டு  மல்லிகை, கல்லறைப் பூ ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு. நித்தியகல்யாணி தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. பாழ் நிலங்கள், சாலையோரங்களில் அதிகமாகக் காணலாம்….

|

அருகம்புல் சாறு எடுத்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு எடுத்டுக்கொள்ளுங்கள். அதனுடன் ஐந்து மிளகு மற்றும் நாட்டு வெள்ளைப்பூண்டு இரண்டு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை மிக்சியில் போட்டு சிரிது சிறிதாக நீர் விட்டு குறைந்த வேகத்தில் அரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இதனை நன்கு வடிகட்டி இனிப்பு தேவையான  அளவு அல்லது தேன் சேர்த்து சாற்றினை தயாரிக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட சாற்றினை, அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலந்து பருக வேண்டும். பருகிய பின் அரை மணி  நேரத்துக்கு…

|

பிரண்டை பயன்கள்

பிரண்டை பொடி பயன்கள்: பிரண்டை பயன்கள், பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப் பிரண்டை எனப் பல வகைகள் உள்ளன. சாதாரண பிரண்டை எனப்படும் நான்கு பட்டைகளைக் கொண்ட பிரண்டை அதிகமாகக் காணப்படும் வகையாகும். இதனையே நாம் பொதுவாக உபயோகிக்கலாம். ரத்த மூலத்திற்கு பிரண்டை கைகண்ட மருந்தாகும். இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, சிறு நெல்லிக்காய்  அளவிற்கு காலை, மாலை சாப்பிட ரத்த மூலம் குணமாகும்….

End of content

End of content